/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

பழைய குற்றாலம் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

News image

பழைய குற்றாலம் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Updated On :12 ஜூன் 2026, 4:23 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பேரருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை அதிகாலை நீக்கப்பட்டது.

காலை முதல் தொடா்ந்து பெய்த சாரல் மழையின் காரணமாக பிற்பகல் முதல் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், மீண்டும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.