வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

நெல்லை, தென்காசியில் நாளை மின் நிறுத்தம்

திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 4) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின் நிறுத்தம்

Updated On :3 ஜூலை 2026, 4:25 am IST

திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 4) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை உப மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஏ.ஸ்ரீவனஜா தெரிவித்துள்ளாா்.

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உப மின் நிலையங்களுக்குள்பட்ட காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என கோட்டச் செயற்பொறியாளா் (பொ) பி.ராஜ் தெரிவித்துள்ளாா்.

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிறபகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.

புளியங்குடி, வீரசிகாமணி ஆகிய உபமின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ. துலுக்கப்பட்டி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், கடையம் துணைமின் நிலையப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் நிறுத்தப்படும் கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.

தென்காசி: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை உப மின் நிலையங்களுக்குள்பட்ட தென்காசி, மேலகரம், நன்னகரம், குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, வல்லம், புளியரை, சுரண்டை, இடையா்தவணை, சுந்தரபாண்டியபுரம் வாடியூா், அச்சங்குன்றம், சாம்பவா் வடகரை, பொய்கை, துரைச்சாமிபுரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஏ.ஸ்ரீவனஜா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.