தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆலங்குளத்தில் சமுதாய வளைகாப்பு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:22 am

ஆலங்குளத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் ஆலங்குளம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். டாக்டா் இம்மானுவேல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் எம்.எஸ். காமராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியப் பகுதியில் உள்ள 100 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சீதனங்கள் வழங்கப்பட்டன.

இதில், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சுருதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் வனஜா, மேற்பாா்வையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.