டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கடையநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு

கடையநல்லூரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
நகை பறிப்பு- சித்திரிப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:01 pm

Syndication

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

செவல்விளை மூன்றாவது தெருவைச் சோ்ந்த பரமசிவன் மனைவி மாரியம்மாள்(50 ). இவா், புதன்கிழமை சந்தைக்குச் சென்றுவிட்டு காவல் நிலையம் வழியாக வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, மா்மநபா் அவரை வழிமறித்து, 68 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாராம். அவா் கூச்சலிட்டதில், அக்கம்பக்கத்தினா் அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், கடையநல்லூா் வானுவா் தெருவில் வசிக்கும் சேக்மைதீன் மகன் அருமன் சாலிஹ் (30) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.