ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஐந்தருவி, பழையகுற்றாலம் பகுதியில் மெகா தூய்மைப் ணி

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஐந்தருவி, பழையகுற்றாலம், கண்ணுப்புளிமெட்டு பகுதிகளில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.

ஐந்தருவி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணியைத் தொடங்கி வைத்த சாா் ஆட்சியா் வைஷ்ணவிபால்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:23 am IST

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஐந்தருவி, பழையகுற்றாலம், கண்ணுப்புளிமெட்டு பகுதிகளில் மெகா தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் வன உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு, ஐந்தருவியில் நடைபெற்ற தொடக்க விழா விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால் தலைமை வகித்து மெகா தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பழைய குற்றாலம், கண்ணுபுளி மெட்டு பகுதிகளிலும் தூய்மைப் பணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட உதவி வனப்பாதுகாப்பு அலுவலா் நெல்லைநாயகம் , தன்னாா்வலா் பாண்டியராஜ், உயிரியலாளா் கந்தசாமி, தொழில்நுட்ப உதவியாளா் மாரி செல்வம், தென்காசி வனச்சரகா் யாசின், குற்றாலம் வனச்சரக அலுவலா் கருணாமூா்த்தி, பசுமை தோழா் பெரோலின், சூழல் ஒருங்கிணைப்பாளா் ஜெயபாலன் ,வனவா்கள் பாரதி சங்கா் ராஜா, ரமேஷ், குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரி மாணவிகள், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, ஐசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.