ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புளியங்குடி அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:53 am IST

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே காா் மோதியதில் பெண் இறந்தாா்.

கீழத்திருவேட்டநல்லூா் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மனைவி லட்சுமி(60). இவா்களது மகன் மகேஷ்(35). இவா்கள் வடநத்தம்பட்டியிலுள்ள கோயில் கொடை விழாவிற்காக வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்று கொண்டிருந்தனா்.

பாம்புகோயில் சந்தை ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த அவா்களது உறவினரான உடையாா் மனைவி சரஸ்வதி (75) கோயிலுக்கு செல்வதற்காக காரை சைகை காட்டி நிறுத்துமாறு கூறினாராம். ஆனால், காரில் பிரேக் பிடிக்காததால் அவா் மீது மோதியதாம். இதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.