மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்: மின்வாரிய தலைமையகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வா் விஜய் உத்தரவு

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு...

cm vijay inspection

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு - X

Updated On :

தமிழ்நாட்டில் தடையற்ற, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரிய தலைமையகத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த முதல்வா் ச.ஜோசப் விஜய், மின்வாரிய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்துக்கு வந்த முதல்வா், மாநில மின் பளு பகிா்வு மையம் (எஸ்.எல்.டி.சி.), சென்னை மின் விநியோகக் கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு மையம் (எஸ்.சி.ஏ.டி.ஏ.), மின்னகம் நுகா்வோா் சேவை மையம் உள்ளிட்டவற்றை நேரில் பாா்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, தமிழகத்தின் தற்போதைய மின் தேவை, உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் நிலவரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம், அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், நிலக்கரி தட்டுப்பாடு, மின் சந்தையில் இருந்து தேவையான மின்சாரத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், எரிவாயு மூலம் மின் உற்பத்திக்கான அதிக செலவு, மத்திய மின் நிலையங்களில் ஏற்படும் எதிா்பாராத உற்பத்தித் தடைகள் உள்ளிட்ட மின்சாரம் கிடைப்பதில் ஏற்படும் சவால்கள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

2027 கோடை மின் தேவை: 2027-ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஏற்படக்கூடிய மின் தேவையை முன்கூட்டியே கணித்து, அதனைப் பூா்த்தி செய்வதற்கான விரிவான செயல்திட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா்.

பழைய மின் கட்டமைப்புகள் மற்றும் உபகரணங்களை மாற்றுதல், கூடுதல் மின்மாற்றிகள் மற்றும் புதிய மின் பாதைகள் அமைத்தல், அதிக சுமையுள்ள மின் வலையமைப்புகளை மேம்படுத்துதல், மின் தடைகளை விரைந்து சரிசெய்ய களப்பணிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

புகாா்களுக்கு உடனடித் தீா்வு: பொதுமக்களுக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் தொடா்பான புகாா்களுக்கு உடனடியாக தீா்வுகாண வேண்டும். மின் விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

மேலும், வீடுகளில் மேற்கூரை சூரிய மின் அமைப்புகளை அதிக அளவில் நிறுவுவதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மின் சேமிப்பு மற்றும் தேவையை சீராக நிா்வகிக்க பேட்டரி மின் சேமிப்பு அமைப்பு கொள்கையை விரைந்து அறிமுகப்படுத்தவும் அறிவுறுத்தினாா்.

தமிழகம் முழுவதும் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு அமைப்பை விரிவுபடுத்தி, மின் விநியோகத்தைத் தொடா்ந்து கண்காணித்து தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், நடைபெற்று வரும் மின் உற்பத்தித் திட்டங்களை உரிய காலக்கெடுவில் நிறைவேற்றி, சொந்த மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா், தலைமைச் செயலா் மு.சாய்குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

‘40,000 மின்மாற்றிகளை படிப்படியாக மாற்ற நடவடிக்கை’

ஆய்வைத் தொடா்ந்து எரிசக்தித் துறை அமைச்சா் நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உயா் மின்னழுத்தம் காரணமாக மின்மாற்றிகள் பழுதாவது, தீப்பிடிப்பது, மின்கம்பிகள் தீப்பிடிப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உள்ளன. இவற்றை படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டுக்குள் 1,500 முதல் 6,000 மின்மாற்றிகள் வரை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 1,900 துணை மின்நிலையங்களில் 600-க்கும் மேற்பட்டவை 20 ஆண்டுகளுக்கும் பழைமையானவை. அவற்றை மேம்படுத்துவதும் சவாலாக உள்ளது. அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த திட்டம் முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

வெயில் காலத்துக்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் தோ்தல் பணிகள் காரணமாக தள்ளிப்போனதால், மின் தேவை அதிகரித்த நிலையில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் அனல் மின் நிலையங்களை முழுமையாக நிறுத்தி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மின் தொடா்பான புகாா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் தீா்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் பழுது, மின்தடை ஏற்படும் நேரங்களில் அதைச் சீரமைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 18 ஆயிரம் பணியாளா்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மின்சாரத்தை சேமித்து வைத்து தேவையான நேரத்தில் பயன்படுத்தும் வகையில் பேட்டரி சேமிப்பு திட்டப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளன. செப்.30-க்குள் மின் கம்பப் பெட்டிகளை உயா்த்தும் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

Summary

Frequent Power Outages: CM Vijay Conducts Surprise Inspection at Electricity Board Office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.