ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு! அன்பில் மகேஸ் பெருமிதம்

முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு....

Increase in enrollment of govt school students in higher education institutions: Anbil Mahesh

அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபை சென்ற அன்பில் மகேஸ் - கோப்புப்படம்

Updated On :

முந்தைய திமுக அரசின் திட்டத்தால், நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

அதன்படி தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், நாட்டின் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் இந்தாண்டு 1,320 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு இது 901 ஆக இருந்தது. 2022 முதல் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுபற்றி அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

"திராவிட மாடல் ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையால் உருவாக்கப்பட்ட திட்டங்களில் 'மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரிப்பள்ளி' திட்டமும் ஒன்று.

தலைவரின் மனதிற்கு மிகவும் நெருக்கமான திட்டங்களில் இதுவும் முக்கியமானது. நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களும் அதிக அளவில் சேர்ந்து பயில வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் சிறப்பான தாக்கத்தை முந்தைய கல்வியாண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1,320 என்ற அளவில் உயர்ந்து இருப்பதை அறிந்து மிகமிக மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிலை என்றென்றும் தொடர வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Increase in enrollment of govt school students in higher education institutions: Anbil Mahesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.