சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு!பத்ரிநாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: வெளிநாட்டு பக்தர்கள் 6 பேரும் பலி! கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விதை! ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம்!அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து!காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!

போக்சோ வீரமணி உள்பட 4 பேரை மீண்டும் காவலில் விசாரிக்க எஸ்ஐடி மனு

போக்சோ வீரமணி உள்பட 4 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு மனு அளித்தது குறித்து...

Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Updated On :

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வீரமணி உள்பட 4 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு மனு அளித்துள்ளனர்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு, ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை செய்கின்றனா்.

ஏற்கெனவே அக். 15 முதல் 17 ஆம் தேதி வரையில் இரு நாள்கள் வீரமணியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மீண்டும் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகிய நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனு அளித்துள்ளது.

நால்வரிடமும் பணப் பரிவர்த்தனை குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, விசாரணை என்ற பெயரில் வீரமணியை சிறப்புப் புலனாய்வுக் குழு துன்புறுத்துவதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வீரமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

SIT petitions to re-arrest 4 people including POCSO Veeramani for questioning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.