வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

போக்சோ வீரமணி மகள் அர்ச்சனாவுக்கு அழைப்பாணை!

போக்சோ வழக்கில் வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது குறித்து...

Veeramani

வீரமணி - கோப்புப்படம்.

Updated On :

போக்சோ குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணியின் வழக்கில் அவரது மகள் அர்ச்சனாவுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு, ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை செய்கின்றனா்.

இதனிடையே, வீரமணியின் மகள் அர்ச்சனா வெள்ளிக்கிழமையில் சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றபோது, அவர் தடுக்கப்பட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தியபோது அர்ச்சனாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அர்ச்சனாவிடம் விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு அழைப்பாணை விடுத்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமையில் நேரில் ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.

Summary

SIT summons POCSO Veeramani's daughter Archana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.