தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

எஸ்ஐஆர்-க்கு எதிரான நிலைப்பாடு: ராகுல் காந்தி கைது நடவடிக்கைக்கு தவெக கண்டனம்

தில்லியில் ராகுல் காந்தி கைது நடவடிக்கைக்கு தவெக கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து...

CEC Protest: TVK condemns Congress MP Rahul Gandhi's arrest in Delhi

ராகுல் காந்தி கைது நடவடிக்கைக்கு தவெக கண்டனம் - PTI

Updated On :

தில்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு தவெக கண்டன தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தவெகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எஸ்ஐஆர் நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தவெக கொண்டிருக்கிறது.

எஸ்ஐஆர் நடைமுறைகளை முன்னிறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தவெக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் காங்கிரஸ் தொண்டர்களும் தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி இன்று (அக். 7) பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை தில்லி காவல்துறையினர் தடுக்க முயன்ற நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி, வலுக்கட்டாயமாக காவல் வாகனத்தில் ஏற்றினர்.

Summary

CEC Protest: TVK condemns Congress MP Rahul Gandhi's arrest in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.