தமிழ்நாடு உள்பட 4 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! - நேரலை செய்திகள் உடனுக்குடன்...
தமிழ்நாடு உள்பட 4 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பாக...

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - படம்: ANI
தமிழகத்தில் மாலை 6 மணியுடன் இடைத்தேர்தல் நிறைவடைந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் வாக்குப் பதிவு நிறைவில் 85.97 சதவிகித வாக்குகளும், தாராபுரத்தில் 80.31 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இவ்விரு தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமையில் (அக். 9) வாக்கு எண்ணிக்கை அதே நாளில் முடிவும் அறிவிக்கப்படும்.
புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற்ற தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் 80.81 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் தட்டாஞ்சாவடியில் 6.29 சதவிகித அளவுக்கு வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
தாராபுரம் தொகுதியில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 78.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுராந்தகத்தில் 83.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு உள்பட 4 மாநில இடைத்தேர்தலில் 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியாகியுள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், துணை ராணுவம் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் எதிர்க்கட்சி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Summary
காலை 9 மணி நிலவரப்படி தட்டாஞ்சாவடி தொகுதியில் 19.20% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆளும் தவெகவின் விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானில் கறுப்பு மை இருந்ததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
புதுவையில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று (அக்.6) இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
மதுராந்தகம், தாராபுரம் (தனித்) தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







