மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

தாராபுரம்: கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது பற்றி...

dharapuram

கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம் - x

Updated On :

தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் எதிர்க்கட்சி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தாராபுரம் தொகுதிக்குள்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் 75 வயது மூதாட்டியின் வாக்கை சின்னத்தை மாற்றி செலுத்திய தேர்தல் அலுவலருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

தேர்தல் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

பின்னர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் அலுவலருக்கு எதிராக கோட்டாட்சியரிடம் திமுகவினர் புகார் அளித்ததை தொடர்ந்து, தேர்தல் அலுவலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, எதிர்க்கட்சியினருடன் தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

Summary

Dharapuram: Voting halted at Kozhinjivadi polling station!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.