மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் தரப்பு வாதம் நிறைவு!

பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டுமென முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Chief Minister Vijay's side conclude

முதல்வர் விஜய் / நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

‘பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. அனைத்து விவரங்களையும் 99 சதவீதம் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளேன். ஒருசில தவறுகள் இருக்கலாம், அதற்காக வேட்புமனுவை ஏற்றதே தவறு எனக் கூற முடியாது’ என்று முதல்வா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், பெரம்பூா் தொகுதியில் முதல்வா் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவரது தோ்தல் வெற்றியை எதிா்த்து, வாக்காளா்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.

தனக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வா் விஜய் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, முதல்வா் விஜய் தரப்பில் இரண்டாவது நாளாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது, பெரம்பூா் தொகுதி வேட்புமனுவில் ரூ.600 கோடிக்கு மேல் தனக்கும், மனைவிக்கும் உள்ள சொத்துகளின் விவரங்கள், வருமான வரி கணக்கு விவரங்கள் என அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. அனைத்து விவரங்களையும் 99 சதவீதம் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளேன். ஒருசில தவறுகள் இருக்கலாம், அதற்காக வேட்புமனுவை ஏற்றதே தவறு என கூற முடியாது. தன்னுடைய வேட்புமனுவை ஏற்றது சரியானது தான். எனவே, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தோ்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து, முதல்வா் விஜய்யின் வெற்றிக்கு எதிராக தோ்தல் வழக்கு தொடா்ந்துள்ள மனுதாரா்கள் தரப்பு வாதங்களுக்காக விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

Summary

Perambur election case: Arguments on behalf of Chief Minister Vijay's side conclude!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.