திருச்செந்தூர் கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று காலை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகக்கவசம் அணிந்து பக்தரைப் போன்று சென்ற அமைச்சரிடம், விரைவான தரிசனத்துக்கு ரூ. 4,000 லஞ்சமாக பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.
தொடர்ந்து, கோயில் அலுவலகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
“திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் புகார்கள் எழுப்பி வந்தனர். இதன்காரணமாக இன்று காலை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் ஆய்வுக்கு வருகை தந்தேன்.
கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்களிடம் பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்துதான் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களிடம் பணம் வாங்கியது தொடர்பாக அர்ச்சகர்கள், அதிகாரிகளிடம் மன்னிப்புக் கடிதம் பெறவில்லை. விளக்கக் கடிதம்தான் பெற்றுள்ளேன். கோயில் சொத்துகள், வருமானம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளேன்.
மேலும், அன்னதானக் கூடம், அடிப்படை வசதிகள், விரிவான தரிசனம் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இன்று முழுவதும் கோயிலில் ஆய்வு செய்யவுள்ளேன்.
ஆய்வின் முடிவில் முழு அறிக்கை வழங்குவேன். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி, தயக்கமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Summary
Tiruchendur Temple Irregularities: Impartial Action! — Minister Ramesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு அமைப்பு!!
உங்களுக்கு ஏன் கொந்தளிப்பு வருகிறது: திமுக எம்எல்ஏ-க்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி

அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம்! திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர், காவலாளிகள் பணியிடை நீக்கம்!








