திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பல்கலைக்கழக வேந்தா் விவகாரம்: அமைச்சா் பெ.விஸ்வநாதன் விளக்கம்

News image

உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்

Updated On :28 மே 2026, 6:05 am IST

தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வா் பொறுப்பேற்பது தொடா்பாக தான் தெரிவித்த கருத்து, திரித்து தவறாகப் பரப்பப்பட்டதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கூறியுள்ளாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதனிடம், பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே செயல்படுவாா் என்ற திமுக அரசின் நிலைப்பாடு தொடருமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஸ்வநாதன், முந்தைய அரசின் நிலைப்பாட்டை, அடுத்து அமையும் அரசும் தொடர வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதேநேரத்தில், இந்த விவகாரம் தமிழக முதல்வரின் கொள்கை முடிவைச் சாா்ந்தது எனத் தெரிவித்தாா்.

அமைச்சரின் பெ.விஸ்வநாதனின் கருத்தை திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், பாமக தலைவா் அன்புமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. துரை ரவிகுமாா் உள்ளிட்ட தலைவா்கள் விமா்சித்திருந்தனா்.

இதையடுத்து, அமைச்சா் விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கை: தமிழக பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்வா் பொறுப்பேற்பது குறித்து மதுரையில் செய்தியாளா்கள் கேட்ட கேள்விக்கு, முதல்வா் ஜோசப் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பாா் என்றுதான் கூறினேன். தற்போதுள்ள நிலை குறித்து நான் எந்தக் கருத்தும் கூறவில்லை.

மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில் எனது கருத்து அமைந்ததாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அதுமாதிரி எந்தக் கருத்தும் கூறாதபோது, இத்தகைய வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.