திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும் : திருமாவளவன்

தவெக ஆட்சி கவிழ எந்தவொரு சூழலிலும் இடம் கொடுக்கமாட்டோம் என திருமாவளவன் உறுதி அளித்துள்ளது குறித்து...

News image

செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் - எக்ஸ்

Updated On :26 மே 2026, 5:49 pm IST

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைவதால், தமிழக வெற்றிக் கழகத்தின் நம்பகத்தன்மை கெடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (மே 26) தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:

''குன்னத்தில் நடந்த திமுக - விசிக மோதல் கவலை அளிக்கிறது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் களையப்பட வேண்டும்.

அதிமுகவுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. அதிமுக நெருக்கடிகளை சந்திக்கும் என தேர்தலுக்கு முன்பே நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் கட்சியில் இணைத்துக்கொள்வது தவெகவின் நம்பகத்தன்மையை கெடுக்கும். இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தவெக ஆதரவு அளிக்கக் கூடாது.

பாஜக உடனான கூட்டணியில் அதிமுக இல்லாமல் இருந்திருந்தால், அக்கட்சியுடன் இணைந்து தவெக ஆட்சி அமைத்திருக்கும்.

5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிப்போம். அந்த நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். எந்த சூழலிலும் தவெக ஆட்சி கவிழ இடம் கொடுக்க மாட்டோம் என்ற நம்பிக்கையோடு தவெக நிர்வாகிகள் ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும்'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.

Summary

TVK's Credibility Will Be Tarnished by AIADMK MLAs Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.