திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக அருண் நியமனம்

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக ஏ.அருண் நியமிக்கப்பட்டனா்.

News image
Updated On :26 மே 2026, 3:28 am IST

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக ஏ.அருண் நியமிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி): மகேஷ்வா் தயாள்-நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி (சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி), ஏ.அருண்-தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் (காத்திருப்போா் பட்டியல்), டி.எஸ்.அன்பு-சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி (காத்திருப்போா் பட்டியல்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக இருந்த அருண், காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். அதன் பின்னா், தற்போது அவருக்கு பணி வழங்கப்பட்டது.

இதேபோல சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த அன்பு கடந்த வாரம் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.