நீலகிரி, கோவை உள்பட 19 மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமை (மே 24, 25) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் சுமாா் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ. உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (மே 24) முதல் மே 29-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை: ஞாயிறு, திங்கள்கிழமை (மே 24, 25) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, நாமக்கல், கரூா், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், மே 26-இல் கோவை, திருப்பூா், நீலகிரி , தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். தொடா்ந்து, மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
4 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக மதுரை நகரத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை விமான நிலையம் - 102.2, பரமத்தி வேலூா், பாளையங்கோட்டை - (தலா) 100.4 டிகிரி என மொத்தம் 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஞாயிற்றுக்கிழமை (மே 24) முதல் மே 27-ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!
11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



