17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழ்நாட்டில் மேலும் 23 அமைச்சர்கள் பதவியேற்பு! நேரலை

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் பற்றி...

News image

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் - TNDIPR

Updated On :21 மே 2026, 11:17 am IST

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு எதிர்த்துப் போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்பளிக்கவில்லை.

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி வந்தே மாதர பாடலுடன் நிறைவடைந்தது.

வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார், கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார், அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது ஃபர்வாஸ், தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார், ராதாகிருஷ்ணன் நகர் எம்.எல்.ஏ. மேரி வில்சன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாா், மேலூா் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோா் அமைச்சா்களாக பதவியேற்றனர்.

மேலும், தவெகவின் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. மதன் ராஜா. பி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி. கே, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. எம். விஜய் பாலாஜி, ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ் செல்வன், சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத், அவிநாசி எம்.எல்.ஏ. எஸ். கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. சி. விஜயலட்சுமி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ஆர்.வி. ரஞ்சித்குமார், கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத், திருவாடானை எம்.எல்.ஏ. ராஜீவ், கடலூர் எம்.எல்.ஏ.பி. ராஜ்குமார், அரக்கோணம் எம்.எல்.ஏ. வி. காந்திராஜ் ஆகியோருக்கு அடுத்தடுத்து அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர்.

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நண்பரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீநாத்துக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் மீண்டும் மூன்றாவது முறையாக இசைக்கப்பட்டுள்ளது.

முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், கடைசியாக தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலும் இசைக்கப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது.

விழா மேடையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், முதல்வர் ஜோசப் சி. விஜய் உள்ளிட்டோர் உள்ளனர்.

தமிழ்நாடு அமைச்சரவையில் ஏற்கெனவே கீர்த்தனா இடம்பெற்றிருக்கும் நிலையில், மேலும் 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் பேரவைத் தலைவரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான தனபாலின் மகன் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.

ராசிபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றிருந்தார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாா், மேலூா் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோா் அமைச்சா்களாக பதவியேற்கவுள்ளனர்.

புதிதாக பதவியேற்கவுள்ள 23 அமைச்சர்களின் பட்டியலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் நண்பரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீநாத், மத்திய அமைச்சர் எல். முருகனை அவிநாசியில் தோற்கடித்த இளம் எம்.எல்.ஏ. கமலி உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், கடந்த 10 ஆம் தேதி முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.