தமிழ்நாட்டில் ராஜாஜி ஆட்சிக்குப் பிறகு தற்போது கூட்டணியாட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அதில் 19 மாவட்ட பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்எம்ஏக்கள் ராஜேஷ்குமார், பெ. விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களுடன் தவெக சார்பில் 21 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். ஏற்கனவே அமைச்சரவையில் முதல்வர் விஜய் உடன் சேர்த்து 10 அமைச்சர்கள் உள்ளனர். தவெக மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் என 23 பேர் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக அமைச்சரவையில், பட்டியலின பின்னணியில் 7 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 23 பேர் கொண்ட பட்டியலில்,
தூத்துக்குடி - ஸ்ரீநாத்,
அவினாசி - S.கமலி,
குமாரபாளையம் - விஜயலட்சுமி,
காஞ்சிபுரம் - R.V. ரஞ்சித்குமார்,
கும்பகோணம் - வினோத்,
திருவாடானை - ராஜீவ்,
கடலூர் - ராஜ்குமார்,
அரக்கோணம் -காந்திராஜ்,
ஒட்டப்பிடாரம் - மதன் ராஜா,
ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி,
கிள்ளியூர் - ராஜேஷ் குமார்,
ஈரோடு கிழக்கு - விஜய் பாலாஜி,
ராசிபுரம் - லோகேஷ் தமிழ்செல்வன்
மேலும், சேலம் தெற்கு - விஜய் தமிழன் பார்த்திபன்,
ஸ்ரீரங்கம் - ரமேஷ், மேலூர் - விஸ்வநாதன்,
வேளச்சேரி - R.குமார்,
ஸ்ரீபெரும்புதூர் - K.தென்னரசு,
கோவை வடக்கு - சம்பத் குமார்,
அறந்தாங்கி - முகமது பர்வேஸ்,
தாம்பரம் - சரத்குமார்,
ஆர்.கே.நகர் - மரிய வில்சன்,
கிணத்துக்கடவு - விக்னேஷ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
தவெக அரசு அமைச்சரவை விரிவாக்கத்தில் மாவட்ட வாரியாக இடம்பிடித்துள்ள அமைச்சர்கள் விவரத்தில் சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள் இடம்பிடித்துள்ளனர். புதுக்கோட்டை 1 அமைச்சர், நாமக்கல் - 3 அமைச்சர்கள், சேலம் - 1 அமைச்சர், காஞ்சிபுரம் - 2 அமைச்சர்கள், சிவகங்கை - 1 அமைச்சர், ஈரோடு - 2 அமைச்சர்கள், இராமநாதபுரம்- 1 அமைச்சர், கோவை - 2 அமைச்சர்கள், திருப்பூர் - 1 அமைச்சர், தூத்துக்குடி - 2 அமைச்சர்கள், செங்கல்பட்டு - 1 அமைச்சர், மதுரை - 2 அமைச்சர்கள் (ஒருவர் காங்கிரஸ்), இராணிப்பேட்டை- 1 அமைச்சர், விருதுநகர்- 2 அமைச்சர்கள் (இருவரும் பெண் அமைச்சர்கள்), கன்னியாகுமரி - 1 அமைச்சர் (காங்கிரஸ்), திருச்சி - 1 அமைச்சர், கடலூர் - 1 அமைச்சர், தஞ்சாவூர் - 1 அமைச்சர் இடம்பிடித்துள்ளனர்.
அதேவேளையில், அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களாக 19 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
With the formation of a coalition government in Tamil Nadu, 19 districts are not represented in the cabinet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி.கே. சிவகுமாருக்கு அடுத்த சவால்! கர்நாடகத்தில் துறை ஒதுக்கீட்டில் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி!

தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறாத தருமபுரி மாவட்டம்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




