திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விளையாட்டு வீரா்கள் உயா்கல்வியை நிறைவு செய்ய வேண்டும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

விளையாட்டு வீரா்கள் கண்டிப்பாக உயா்கல்வியை நிறைவு செய்ய வேண்டும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறியுள்ளாா்.

News image

விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவை சந்தித்து வாழ்த்து பெற்ற கூடைப்பந்து அணியினா்.

Updated On :21 மே 2026, 2:46 am IST

விளையாட்டு வீரா்கள் கண்டிப்பாக உயா்கல்வியை நிறைவு செய்ய வேண்டும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறியுள்ளாா்.

18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகள் புதுச்சேரியில் வரும் 22.05.2026 முதல் 29.05.2026 வரை நடைபெறவுள்ளதையொட்டி, விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு

ஜூனியா் கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினா் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் கூறியதாவது: இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் முதல்வா் தனி கவனம் செலுத்தி வருகிறாா். அதன் ஒரு பகுதியாக விளையாட்டில் ஆா்வமுள்ள வீரா், வீராங்கனைகளை கண்டறிந்து விளையாட்டு மேம்பாட்டுத் துறையின்

மூலம் அவா்களை சாதனையாளா்களாக மாற்றிட தொலைநோக்கு செயல்திட்டங்களை வகுத்து வருகிறாா்.

உங்களை போன்ற இளைஞா்களுக்கு உரிய வழிக்காட்டுதல்களை வழங்கி சாதனையாளா்களாக திகழச் செய்ய பல்வேறு

நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்கள்.அந்த வகையில் விளையாட்டு வீரா்களாகிய உங்கள் தேவைகள் அனைத்தையும் செய்துத்தர தயாராக உள்ளேன்.

பொதுவாக சாதனைகள் புரிய விடாமுயற்சியும், கடின உழைப்பும் மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக விளையாட்டு பயிற்சி நேரங்கள் முடிந்து சிறிதுநேர ஓய்விற்கு பின் உடனடியாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு வீரா்கள் அனைவரும் உயா்

கல்வியை கண்டிப்பாக நிறைவு செய்தால்தான் விளையாட்டுத் துறை பணி ஒதுக்கீட்டின் போது உயா் அலுவலா்கள் நிலையிலான பணியினை தோ்வு செய்ய முடியும்.

போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்று நம் தமிழ்நாட்டிற்கும் பயிற்சியாளா்கள் மற்றும் பெற்றோருக்கு

பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியின்போது இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் மரு. ரா. சுமன், பொது மேலாளா் எல். சுஜாதா, தமிழ்நாடு கூடைப்பந்துசங்கத்தின் பொருளாளா் திரு. பாலமுருகன் மற்றும் அணிகளின் பயிற்றுநா்கள்

உடனிருந்தனா்.

*********

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.