அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக 'போர்வாள் நாளிதழை' கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருக்கும் ஒரு தரப்பினர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தலைமையில் தனியாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக இருந்த ’நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழ், ’ஜெ நியூஸ்’ தொலைக்காட்சி உள்ளிட்டவை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இவ்விரண்டிலும் கடந்த சில நாள்களாக இபிஎஸ் தரப்புக்கு எதிரான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், போர்வாள் என்ற நாளிதழை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் போர்வாள் நாளிதழை இபிஎஸ் இன்று வெளியிட்ட நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று அதிமுக தலைமை வெளியிடும் செய்திகள், பொதுச் செயலாளரின் அறிக்கைகள், கட்சியின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான ”போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள். இந்நிகழ்வின் போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
'Porvaal' Launched as AIADMK's Official Newspaper!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பலவீனமான தலைமை, தோல்வியை மறைப்பதற்காக அரசு மீது பழி போடும் இபிஎஸ்: தவெக

சமூக ஊடகங்களில் வைரலான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!







