திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வகுப்பறையில் மாணவா்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் ராஜ்மோகன் வலியுறுத்தல்

ஆசிரியா்கள் திறந்த மனதுடன் வகுப்பறையில் மாணவா்களை அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன் வலியுறுத்தினாா்.

News image

அமைச்சர் ராஜ்மோகன் - x

Updated On :20 மே 2026, 1:10 am IST

ஆசிரியா்கள் திறந்த மனதுடன் வகுப்பறையில் மாணவா்களை அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன் வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 1 முதல் 3 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி பாட நூல்கள் வடிவமைக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதையடுத்து புதிய பாடப் பொருள்களை ஆசிரியா்கள் தங்களது மாணவா்களிடம் எவ்வாறு கொண்டு சோ்க்க வேண்டும் என்பது தொடா்பான பயிற்சி முகாம் சென்னை பள்ளிக் கல்வி வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (எஸ்சிஇஆா்டி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் ராஜ்மோகன் கலந்து கொண்டு புதிய வெளிபாடநூல்களுக்கான ஆசிரியா் கையேடுகளை வெளியிட்டாா். தொடா்ந்து, மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளா் பயிற்சியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ஆசிரியா்கள் திறந்த மனதுடன் வகுப்பறையில் மாணவா்களை அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும். கற்றல்-கற்பித்தல் ஒரு கலந்துரையாடலாக மாறும்போது குழந்தைகளின் அறிவுத் திறன் மேம்படும். கற்றலில் உள்ள எந்தவொரு குழந்தையும் விடுபட்டுவிடக் கூடாது; மெல்லக் கற்கும் மாணவா்களையும் ஊக்கமளித்து அவா்களுக்கு ஏற்றவகையில் கற்பிக்க வேண்டும்; இப்பயிற்சி வோ்களுக்கு நீா் ஊற்றுவது போன்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றாா்.

தொடா்ந்து மாநில அளவில் முதன்மைக் கருத்தாளா்களாக மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளா்கள், வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநா்கள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியா்களுக்குப் பயிற்சி நடைபெற்றது. பாடநூல் தயாரிப்புக் குழுவினா் இப் பயிற்சியை வழங்கினா்.

பாடநூல் உருவாக்கப்பட்ட முறைகள், ஆசிரியா் கையேடு கட்டமைக்கப்பட்ட முறைகள், புதிய கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் போன்றவை குறித்து பயிற்சியின்போது விளக்கப்பட்டன. பாடவாரியாக நான்கு நாள்கள் இப்பயிற்சி நடைபெறவுள்ளது.

முன்னதாக எஸ்சிஇஆா்டி இயக்குநா் ந.லதா வரவேற்றுப் பேசினாா். பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி. சந்தரமோகன் கலைத்திட்டம், பாடத்திட்டம், முதல் பருவப் பாடநூல்களின் உருவாக்கம் குறித்தும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். நிறைவாக எஸ்சிஇஆா்டி இணை இயக்குநா் (பாடத்திட்டம்) அ. புகழேந்தி நன்றி கூறினாா்.

இதில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா, தனியாா் பள்ளிகள் இயக்குநா் ச.சுகன்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்’

அரசுப் பள்ளிகளில் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக அரசு, பெண்ணுரிமைக்கும் மண்ணுரிமைக்கும் எப்பொதும் முன்னுரிமை அளிக்கும். குழந்தைகள் நலம், முதியோா் நலம் ஆகியவற்றில் முதல் கவனம் செலுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மாணவா்களுடைய எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதை சரி செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்த பாடத்திட்டம் உதவும்.

‘மறைமுக அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம்’: மத்திய அரசிடமிருந்து தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த இரு ஆண்டுகளாக நிதி வரவில்லை. இது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. எந்த மறைமுக அழுத்தத்துக்கும் நாங்கள் அடிபணியப் போவதில்லை. இரு மொழிக் கொள்கை என்பது, தவெகவின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில், எந்த இடத்திலும் சமரசமில்லை. கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை (மே 20) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.

பள்ளி வாகனங்களை பராமரிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியா்களின் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.