திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குதிரை பேரம் மூலமாக ஆட்சியைத் தக்கவைக்கும் தவெக அரசு! எஸ்.எஸ். சிவசங்கர்

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் குற்றச்சாட்டு...

News image

சிவசங்கர் - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 5:09 pm IST

அதிமுக, அமமுக சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தின் மூலமாக ஆதரவு பெற்று ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார்.

பெரம்பலூரில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,

"தவெக தலைவர் விஜய், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகும் மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் திமுக மீது அவதூறுகளைப் பரப்பி எதிர்க்கட்சித் தலைவரைப் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஆளும் கட்சியான தவெக, சமூக ஊடகப் பிரசாரங்கள் வாயிலாக மக்களின் அனுதாபத்தைப் பெற முயற்சித்தது. தற்போது கூட்டணிக் கட்சிகள் அளித்த ஆதரவின் காரணமாக மட்டுமே இந்த அரசு நீடித்து வருகிறது.

தொடர் விமர்சனங்களும் அரசியல் ஆணவமும் நிர்வாகத்தை பலவீனப்படுத்தும். வெறும் அமைச்சராகிவிட்ட காரணத்தினால் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடும் தன் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற தோரணையில் ஆதவ் அர்ஜுனா செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு என்பது யாருடைய தனிப்பட்ட வணிகப் பேரரசும் அல்ல. அரசியல் அதிகாரம் என்பது தற்காலிகமானது, நிலையற்றது, மாறிக்கொண்டே இருக்கக் கூடியது.

பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்பட, அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வரக் கூடாது என்பதைத் தடுப்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை இந்த அரசு புறக்கணித்தால் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது" என்று கூறினார்.

Summary

TVK government was trying to retain power through horse-trading: DMK Ex minister S.S. Sivasankar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.