ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம்! அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

200 யூனிட் இலவச மின்சாரம் குறித்து அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

200 Units of Free Electricity: Circular Issued to Officials

முதல்வர் விஜய் - IANS

Published On :16 மே 2026, 12:16 pm IST

தவெக அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் முந்தைய திட்டத்தின்படி, அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தவெக அரசு பொறுப்பேற்றதும் தனது தோ்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கான திட்டத்தில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.

இந்தப் புதிய அரசாணையின்படி, இரு மாதங்களுக்கான மின் பயன்பாடு 500 யூனிட்டுக்குள் இருந்தால் 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலமாக 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 2.23 கோடி குடும்பத்துக்கு ரூ. 235 மிச்சமாகும்.

500 யூனிட்டுகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் மின்நுகா்வோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவச சலுகை தொடா்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவெக அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டண மென்பொருளில் தகுதி சரிபார்ப்பு, மானிய கணக்கீட்டு பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மின் வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் இதுபற்றி எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மே 10ல் இருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

200 Units of Free Electricity: Circular Issued to Officials

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.