திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எலக்‌ஷனாலும் கரெக்‌ஷனாலும் மக்கள்தான்; அப்டேட் ஆகி மீண்டும் வருவோம்! - மு.க. ஸ்டாலின்

தோல்வியை நினைத்துக் கொண்டு முடங்கிவிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Updated On :14 மே 2026, 9:47 pm IST

தோல்வியை நினைத்துக் கொண்டு முடங்கிவிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் யாரும் எதிர்பார்த்திராத வகையில், வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை, தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக தோல்வி குறித்து திமுகவினரிடம் கருத்துக்கேட்பதற்காக புதிய வலைதளம் ஒன்றை ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில், “எல்லோருக்கும் வணக்கம், ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் உங்களுக்காக விடியோவில் பேசுகிறேன். கடைசியாக தொகுதி மறுவரையறையின்போது விடியோவில் பேசியிருந்தேன். அதைத் தொடர்ந்து தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கடந்த இரண்டு வாரங்களாகவே எல்லோருடைய வீடுகளிலுமே தொடர்ந்து செய்தி சேனல்கள் மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளில் திமுக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு அவர் காரணம்; இவர் காரணம் என்று யாரும் யாரும் மீதும் பழிபோடாதீர்கள். தலைவராக இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன். வெற்றி கிடைக்கும்போது எனக்குத்தான் அந்த கிரெடிட் வந்து சேருகிறது.

அதேபோல, தோல்வி அடையும்போதும் அந்தப் பழியை நான்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம். சரி தோற்றுவிட்டோம், அதற்காக அதையே நினைத்து முடங்கிடமாட்டேன்.

உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன். நாம எல்லாருமே அப்படித்தான் வரணும். அதுக்கு உங்களோட ஆலோசனைகள், பரிந்துரைகள், ஐடியாக்கள் எனக்கு வேணும். எலக்‌ஷனா இருந்தாலும் கரெக்‌ஷானா இருந்தாலும் உங்ககிட்டதான் வந்தாகணும். மக்கள்தான் எல்லாம்.

இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம், திமுக இன்னும் எப்படியெல்லாம் உங்களுக்காக உழைக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க. உங்களோட கருத்துக்களை ஓப்பனா சொல்லுங்க.

அதுக்காகத்தான் இந்த 'உடன்பிறப்பின் குரல்' வெப்சைட். இதுல உங்க கருத்துக்களைப் பதிவிடுறது ரொம்ப சிம்பிள். உங்க வாய்ஸ்லேயே பேசி கருத்துக்களைச் சொன்னீங்கன்னா அதுவே டைப் ஆகிடும். நேரடியா நீங்களே டைப் பண்ணியும் சொல்லலாம்.

இல்லன்னா ஒரு பேப்பர்ல எழுதி அந்தப் போட்டோவை அப்லோட் பண்ணலாம், டாக்குமெண்ட்டா அனுப்பலாம். உங்க கருத்துகள் எனக்கு வந்து சேர்ந்துடும். அதையெல்லாம் படிச்சு, பரிசீலிச்சு நாம அடுத்தக்கட்ட நடவடிக்கையை வடிவமைக்கப் போறேன்.

நம்மோட அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு எல்லாத்தையும் மாத்தியாகணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எவால்வ் ஆகித்தான் ஆகணும். உங்களோட கருத்துக்களின் அடிப்படையில 'DMK 2.0' வரும். கட்சியோட எல்லா மட்டத்துலயும் தேவையான மாற்றங்களைச் செய்யப்போறேன். இதனால், அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும், உங்களுக்காக இயங்கும். உடன்பிறப்பே... நீங்க சொல்லுங்க!.. நான் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

"I will not become paralyzed by thoughts of defeat; I will immediately adapt and bounce back," stated former Chief Minister and DMK President Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.