சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் மிகச்சிறப்பான முறையில் முன்மாதிரியாகத் தமிழ்நாடு செயல்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே திறன்வாய்ந்த சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகம் (லீட்ஸ்) குறித்த 2025-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை, புது தில்லியில் மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை வெளியிட்டாா்.
அந்த அறிக்கையின்படி, சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் மிகச் சிறப்பான முறையில் முன்மாதிரியாக செயல்பட்ட பிரிவில், கடலோர மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரிவில் நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும், வடகிழக்கு மாநிலங்களில் மிசோரமும், யூனியன் பிரதேசங்களில் தில்லியும் இடம்பிடித்துள்ளன.
இந்த மாநிலங்களும், தில்லியும் கொள்கை, உள்கட்டமைப்பு, சேவை விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை செயல்பாடுகளில் நீடித்த தனிச்சிறப்பை வெளிப்படுத்தி, மிகச் சிறந்த செயல்திறன் கொண்டவையாக உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் வெளியீடு: இரண்டு பேர் முதலிடம்!

மாணவா்களின் மனநலன்: உச்சநீதிமன்றம் நியமித்த குழு 30 கல்வி நிறுவனங்களில் ஆய்வு

கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கை தகவல்
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




