சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தமிழ்நாடு வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் வெளியீடு: இரண்டு பேர் முதலிடம்!

வேளாண் இளம் அறிவியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் வெளியிடப்பட்டது தொடர்பாக..

News image

வேளாண் பல்கலைக்கழகம் - file photo

Updated On :3 ஜூலை 2026, 1:54 pm IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2026–27 கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

இந்த கல்வியாண்டில் 14 இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைக்காக இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 26,709 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 24,435 விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்கப்பட்டன. இதில் 15,757 பேர் மாணவிகள்.

அரசு கல்லூரிகளில் 2,856 இடங்களும், தனியார் இணைப்புக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 3,051 இடங்களும் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த மாணவி மெர்லின் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மாதவராஜன் ஆகியோர் தலா 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்துள்ளனர். மேலும், முதல் 10 இடங்களில் 6 மாணவிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

The rank list for undergraduate admissions at Tamil Nadu Agricultural University for the 2026–27 academic year was released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.