திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இபிஎஸ் மனு!

சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவை செயலாளரிடம் மனு.

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 7:38 pm IST

தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் மே 13 ஆம் தேதிக்குள் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் ஆர்.வி. ஆர்லேகா் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், இன்று(மே 13) காலை முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு முன்மொழியப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரையைத் தொடர்ந்து கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பகுதிவாரியாக ஆறு பிரிவுகளில் அமர்ந்துள்ள எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் கணக்கெடுப்பட்டது.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. நடுநிலை வகிப்பதாக 5 வாக்குகள் பதிவாகின.

இதில், சி.வி. சண்முகம் அணியிலான 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை செயலாளரிடம் இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Summary

Functionaries from the Edappadi Palaniswami faction have submitted a petition to the Assembly Secretary, seeking action against AIADMK MLAs who extended support to the TVK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.