அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்

தமிழ் செய்திகள்

/

திமுக ஆதரவுடன் முதல்வராகப் போவதாக இபிஎஸ் கூறினார்! சி.வி. சண்முகம்

இபிஎஸ் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு...

News image

சி.வி. சண்முகம். - கோப்புப்படம்

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

திமுக ஆதரவுடன் முதல்வராகப் போவதாகவும் இதுபற்றி தில்லியில் பாஜகவிடம் பேசிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"எம்எல்ஏக்கள் தன்னை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நியமித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு. எம்எல்ஏக்கள் கூட்டம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? 47 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட இபிஎஸ் அளித்த கடிதம் போலியானது. கையெழுத்து போலியானது.

புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டபோது இபிஎஸ் எங்களிடம் என்ன சொன்னார்? 'நான் மேலே பேசிவிட்டேன், அவர்கள் ஓகே சொல்லிவிட்டனர். நான் முதல்வராக ஆகப் போகிறேன். திமுக வெளியில் இருந்து ஆதரவு தரப்போகிறது' என்று கூறினார்.

புதுவையில் என்ன பேசினார் என்று இபிஎஸ் வெளிப்படையாகச் சொல்லத் தயாரா?

எம்எல்ஏக்கள்தான் கொறடா, சட்டப்பேரவைக் குழுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, பெரும்பான்மை எம்எல்ஏக்களாகிய நாங்கள் தேர்வு செய்த கொறடா, சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அடங்கிய கடிதத்தை நாங்கள் பேரவைத் தலைவரிடம் அளித்திருக்கிறோம். இரண்டு கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

திருமாவளவனை முதல்வராக்க முயற்சி நடைபெற்றது. திருமாவளவன் மட்டும் முதல்வர், மற்ற அமைச்சர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று திமுக கூறியது. ஆனால் முதல்வராகத் தான் இருப்பேன் என்று இபிஎஸ் கூறிவிட்டார்.

47 தொகுதிகள் வெற்றி பெற்றதை மிகப்பெரிய வெற்றி என்று இபிஎஸ் கூறுகிறார். அவர் எல்லாம் பொதுச் செயலாளரா? தோல்விக்கு பொறுப்பேற்க இபிஎஸ் மறுக்கிறார்" என்று பேசினார்.

Summary

EPS claimed he would become Chief Minister with support of the DMK: C.V. Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.