தமிழ் செய்திகள்
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி. வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், தவெக ஆட்சிக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். மேலும், அதிமுக கட்சிக் கொறடாவாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்க அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் உத்தரவை மீறும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்துக்கு சென்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களை இன்று மாலை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Votes will be cast against TVK in the confidence vote - EPS Faction
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ. பங்கேற்கலாம்: உச்சநீதிமன்றம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு!

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ! நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை!
விடியோக்கள்





