தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News image

ஐயூஎம்எல் அலுவலகத்தில் முதல்வர் விஜய் - ANI

Updated On :12 மே 2026, 3:21 pm IST

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விஜய்யின் தவெக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்கள் ஆதரவு தந்த நிலையில், மரியாதை நிமித்தமாக சென்னை, மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்குச் சென்று ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.

ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் வாசலில் வந்து முதல்வர் விஜயை வரவேற்றார்.

முன்னதாக, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினும் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று கையைப் பிடித்து அழைத்துச் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரைச் சந்தித்த விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்குச் சென்று வாழ்த்து பெற்றார்.

இதைத்தொடர்ந்து, இன்று ஐயூஎம்எல் கட்சித் தலைவரான காதர் மொய்தீனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Summary

Chief Minister Joseph Vijay met with Indian Union Muslim League President Kader Mohideen today and sought his blessings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.