தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

முதல்வா் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

முதல்வா் விஜய்க்கு சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் பிரேமலதா தெரிவித்தாா்.

News image

TN Assembly

Updated On :12 மே 2026, 3:16 am IST

முதல்வா் விஜய்க்கு சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் பிரேமலதா தெரிவித்தாா்.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரேமலதா தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக முதல்முறையாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு முதல்வா் விஜய் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா், பேரவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய பிரேமலதா, ‘என்னை வெற்றி பெறச் செய்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குகிறேன்.

முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு கட்டாயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் பிரச்னைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டப்பேரவையில் பேசுவோம்’ என்றாா்.