தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்

இனி வரும் காலங்களில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் ஒலிக்கப்படுமா? என்ற கேள்வி எழுவதாக திருமாவளவன் கருத்து...

News image

விஜய் / திருமாவளவன் - பிடிஐ

Updated On :10 மே 2026, 8:11 pm IST

பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சென்னை நேரு அரங்கத்தில் இன்று (மே 10) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடலும் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.

இந்நிலையில், முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் 3வதாக பாடப்பட்டது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து திருமாவளவன் பேசியதாவது:

''முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதே வழக்கம். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடுவதே நீண்ட கால நடைமுறை. ஆனால், முதல்வர், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற அரசியலை விரும்புவோர் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3வதாக பாடப்பட்டது அதிகாரிகள் கவனக் குறைவால் நிகழ்ந்ததாகக் கருத முடியவில்லை. மாறாக ஆளுநரின் விருப்பப்படியோ ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் ஒலிக்கப்படுமா? என்ற கேள்வி எழும்புகிறது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அல்லது தவெக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய், கஜானா காலி என்று கூறி அச்சமூட்டுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ. 10 லட்சம் கோடி என்பது நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளதாக மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்''. என திருமாவளவன் பேசினார்.

Summary

Tamil Thaai Vaalthu Controversy TVK Must Provide an Explanation Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.