தமிழ் செய்திகள்
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளர்களாக இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் முதல்வர் விஜய்யின் கூடுதல் தலைமைச் செயலராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக இருந்த லட்சுமிபிரியா முதல்வரின் தனிச் செயலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் பதவியேற்றதில் இருந்து ஓராண்டு பதவியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் செய்துவைத்தார்.
Summary
Two individuals have been appointed as the private secretaries to Chief Minister C. Joseph Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









