கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்

News image

தவெக உறுப்பினர் தாமு பிரமாணப் பத்திரம் - EC

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் ராயபுரம் பேரவை உறுப்பினர் விஜய் தாமு, அண்மையில் பெரிய அரிவாளால் கேக் வெட்டியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

இத்தனை நாள்களும் பள்ளி மாணவர்களும், இன்னும் சில இளைஞர்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது கத்தி மற்றும் அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடும் விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுமே அவர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்துவிடும்.

இது பற்றி தெரியாத தவெகவின் பேரவை உறுப்பினர் தாமு, அருகில் இருப்பவர் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், அரிவாளால் கேக் வெட்டி அந்த விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் ராயபுரம் எம்எல்ஏ தாமு ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர் என்று கூறப்பட்ட நிலையில், அவரது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இன்னோவா கார், மோட்டார் சைக்கிள் இருக்கிறது என்று பதிவிட்டிருப்பது ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

தவெக தலைவர் விஜய்க்கு ஆட்டோ ஓட்டுநர் என அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களுக்கும் ஏழை ஆட்டோ ஓட்டுநர், தவெகவில் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில், அவரது சொத்து விவரத்தில் ஒரு ஆட்டோ கூட சொந்தமாக இல்லை என்பது பேசுபொருளாகியிருக்கிறது. அவர் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுபவராக இருக்கலாம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இன்னமும் விஜய் ஆட்சிக்கு வரவில்லை. அவர் ஆட்சியமைக்க ஆதரவு கோரி வருகிறார். ஒரு பக்கம் ஆளுநரும் அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த நேரத்தில் தலைவர் விஜய்க்கு உறுதுணையாக இருக்க வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்வானவர்கள், அவர் ஆட்சிக்கு வந்தால் என்னவாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பதே விஜய்க்கு வாக்களித்து முதல்வராக்க விரும்பிய மக்களின் கோரிக்கையை அமைந்துள்ளது.

Summary

TVK auto driver who won in Royapuram is not have auto

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.