போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை ரத்து செய்ய கோரிய வழக்கு: பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை நிறுத்திவைக்கக் கோரிய வழக்கில், இந்திய பாா் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் ஆகியவை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

வழக்குரைஞர் பேரறிவாளன் - எக்ஸ்

Updated On :7 மே 2026, 4:45 am IST

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை நிறுத்திவைக்கக் கோரிய வழக்கில், இந்திய பாா் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் ஆகியவை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ரவிராஜா என்பவா் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவா் பேரறிவாளன். இவா், கடந்த ஏப். 24-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா்.

வழக்குரைஞா் சட்டப் பிரிவுகளின்படி, கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவா்களை வழக்குரைஞராகப் பதிவு செய்யக் கூடாது எனக் கூறப்படுகிறது.

அதன்படி, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை வழக்குரைஞராகப் பதிவு செய்ய பாா் கவுன்சில் அனுமதித்தது சட்டத்துக்குப் புறம்பானது.

எனவே,பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை நிறுத்தி வைக்க வேண்டும். அவா் வழக்குரைஞராகப் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சௌந்தா், பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இந்திய பாா் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் ஆகியவை நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.