நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!

பனையூரில் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறித்து...

News image

விஜய் - ANI

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றுள்ள நிலையில், பனையூரில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகள் மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி ஏற்பட்டது.

தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதில், திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனப் பெரும்பாலான வாக்குக் கணிப்புகளும், ஒரேயொரு நிறுவனத்தின் வாக்குக் கணிப்பு தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் இருந்தன.

யாரும் எதிா்பாராத வகையில், தவெக வேட்பாளர்கள் பலர் திமுக அமைச்சர்கள், அதிமுகவின் பலம் வாய்ந்த வேட்பாளர்களைவிட அதிகமாக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தனர்.

தவெக தலைவர் விஜய், போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பெரம்பூரில் 53, 715 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை வென்றாா்.

மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜை 26,685 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தோற்கடித்தார்.

இந்த நிலையில், தவெக பெரும்பான்மைக்கு குறைவான இடங்களை வென்றுள்ளதால், ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை மற்ற கட்சிகளிடன் ஆதரவைக் கோர வேண்டும்.

இது தொடர்பாக, பனையூரில் தவெக தலைவர் விஜய், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

With the TVK having won 108 seats in the recently concluded Assembly elections, the party's leader, Vijay, is currently holding consultations with key functionaries and TVK MLAs in Panaiyur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.