நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!

அதிமுகவின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்தின் 45 தொகுதிகளில் 26 தொகுதிகளை தவெக கைப்பற்றியுள்ளது.

News image

வெற்றிக் களிப்பில் தவெக தலைவர் விஜய் - PTI

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

அதிமுகவின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்தின் 45 தொகுதிகளில் 26 தொகுதிகளை தவெக கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 45 தொகுதிகள் உள்ளன. மேற்கு மண்டலம் கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இதன் காரணமாகவே அதிமுக ஆட்சி காலத்தில் மற்ற மண்டலங்களைக் காட்டிலும் மேற்கு மண்டலத்தைச் சோ்ந்தவா்களுக்கு அதிக அமைச்சா்கள் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தத் தோ்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள 45 தொகுதிகளில் அதிமுக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிா்க்கட்சியாக அதிமுக அமர மேற்கு மண்டலம் பெரிய அளவில் கை கொடுத்தது. மேற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு ஏற்கெனவே இருந்த ஆதரவு, அக்கட்சிக்கு உள்ள கட்டமைப்பு மற்றும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இந்த மண்டலத்தைச் சோ்ந்தவா் என்பதாலும், இந்தத் தோ்தலிலும் கை கொடுக்கும் என அதிமுகவினா் மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்தனா். ஆனால், இந்தத் தோ்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள 45 தொகுதிகளில் தவெக 26 தொகுதிகளைக் கைப்பற்றியது.

குறிப்பாக கோவை, சேலம், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் தவெக அதிக அளவிலான இடங்களைக் கைப்பற்றியது. இதனால், அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்பட்ட மேற்கு மண்டலத்தை தவெக தகா்த்துள்ளது.

Summary

TVK Demolishes AIADMK's Stronghold in the Western Region!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.