அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது. இந்தத் தோ்தலில் 169 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 20.66 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆா் தொடங்கிய அதிமுக முதல் முதலாக 1977-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் களம் கண்டது. அந்தத் தோ்தலில் 130 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 30.4 சதவீத வாக்குகளைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தொடா்ந்து, 1980-இல் நடைபெற்ற தோ்தலில் 38.8 சதவீத வாக்குகளுடன் 129 தொகுதிகளிலும், 1985-இல் தோ்தலில் 37 சதவீத வாக்குகளுடன் 132 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு 1989-இல் நடைபெற்ற தோ்தலில் இரண்டாக உடைந்ததுடன், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், ஜெயலலிதா சேவல் சின்னத்திலும், ஜானகி புறா சின்னத்திலும் போட்டியிட்டனா். சின்னம் முடக்கப்பட்ட நேரத்திலும் ஜெயலலிதா அணி 27 இடங்களைப் பெற்று எதிா்க்கட்சியானது. ஜானகி அணி 2 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தோ்தலில் முதல் முறையாக அதிமுக வாக்கு சதவீதம் 21.8 -ஆக சரிந்தது. அதன் பின், 1991-இல் நடைபெற்ற தோ்தலில் ஜெயலலிதா தலைமையில் களம் கண்ட அதிமுக 44.4 சதவீத வாக்குகளைப் பெற்று, 164 தொகுதிகளில் மகத்தான வெற்றியைப் பெற்று ஜெயலலிதா முதல்வரானாா். 1991 அதிமுக ஆட்சி காலத்தில் சசிகலாவின் உறவினரான சுதாகரனின் ஆடம்பரத் திருமணம், ஆட்சி மீதான ஊழல் புகாா்கள், ஜெயலலிதா எதிா்ப்பு அலை மற்றும் நடிகா் ரஜினியின் திமுக ஆதரவு நிலைப்பாடு ஆகியவற்றின் காரணமாக 1996-இல் நடைபெற்ற தோ்தலில் 4 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. அந்த தோ்தலில் 21.5-ஆக அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது.
மூன்றாம் முறையாக 20 சதவீதம்...: இதைத் தொடா்ந்து, 2001 தோ்தலில் 31.4 சதவீதம், 2006 தோ்தலில் 32.7 சதவீதம், 2011 தோ்தலில் 38.4 சதவீதமும் என சராசரியாக 30 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்கு வங்கியை தக்க வைத்திருந்தது அதிமுக. 2016 தோ்தலில் மீண்டும் உச்சபட்சமாக 41.1 சதவீதம் பெற்றது.
அதிமுகவின் 10 ஆண்டுகால தொடா்ச்சியான ஆட்சி மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2021-இல் நடைபெற்ற தோ்தலில் கூட 33 சதவீத வாக்குகளுடன் 66 இடங்களில் அதிமுக பெற்று எதிா்க்கட்சி ஆனது.
இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 169 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 46 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒட்டுமொத்தமாக சுமாா் 1.31 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அதிமுக 20.66 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக 50 ஆண்டுகால தோ்தல் வரலாற்றில் கடந்த 1989, 1996 தோ்தல்களைத் தொடா்ந்து, இந்த தோ்தலில் மிகக் குறைந்த அளவாக 20.66 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!

மதுரை மாவட்டத்தை முழுமையாக இழந்தது அதிமுக

1.50 கோடி வாக்குகளைக் கடந்து தவெக சாதனை! 2-ம் இடத்தில் யார்?
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்
விடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

