தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், விஜய் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இதனைக் கொண்டாடியுள்ளனர். இந்த விடியோ சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளிலும், அதிமுக 57 தொகுதிகளிலும், திமுக 49 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பெரம்பூர் தொகுதியில் 1 மணி நிலவரப்படி (6வது சுற்று) 34,482 வாக்குகள் பெற்று 13,574 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சேகர் 20,908 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதுமட்டுமின்றி தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் முன்னிலையில் உள்ளதால், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் கடுமையான போட்டி அளித்து வருகின்றனர்.
Summary
TVK Takes the Lead Family Members Celebrate at Vijay's Residence with Whistles
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் கே.என். நேரு முன்னிலை!
அமைச்சர் கீதா ஜீவனைப் பின்னுக்குத் தள்ளிய விஜய் நண்பர்!
மேற்கு வங்கம்: பாஜக - 177, திரிணமூல் - 107; பவானிபூரில் மமதா மீண்டும் முன்னிலை!

திமுக கோட்டை தகர்கிறது! சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை!
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


