தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை தவெக பெறும்: தொல்.திருமாவளவன்

News image
Updated On :2 மே 2026, 11:47 pm

திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை தவெக பெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட காணொலிப் பதிவு:

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா்களும், விசிக சாா்பில் போட்டியிட்ட 8 வேட்பாளா்களும் உறுதியாக வெல்வாா்கள் என நம்புகிறேன். திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது என்று சொன்னால், அதற்கு விசிகவின் அணுகுமுறையும், விசிகவின் உறுதிப்பாடும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேலும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட சில தொகுதிகளில் சில விசிக பொறுப்பாளா்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என்ற தகவல் எனக்கு வந்துள்ளது. அதுதொடா்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், இந்தத் தோ்தலில் விசிகவினா் சிறப்பாக பணியாற்றியதாக கூட்டணிக் கட்சி தலைவா்கள் என்னை தொலைபேசியில் அழைத்து தெரிவித்தனா்.

இக்கூட்டணி-கொள்கை பிடிப்புள்ள கூட்டணி. இந்தக் கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விசிக பெரும் முயற்சி எடுத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கூட்டணியை சீா்குலைக்க பல்வேறு முயற்சிகளை பலரும் எடுத்தனா். எப்படியாவது திருமாவளவனை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என, என்னை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த நினைத்தனா்.

மதவாத, ஜாதியவாத சக்திகள் பலவித முகமூடிகளோடு களத்துக்கு வந்துள்ளன. அவா்கள் வலுப்பெற்றால் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இதனால் அவா்களின் முயற்சிகளையெல்லாம் புறந்தள்ளி கூட்டணியில் தொடா்ந்து நீடித்தோம். கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில் நாம் வேறொரு முடிவை எடுத்திருந்தால், தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியிருக்கும். அதை நாம் விரும்பவில்லை.

தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என சொல்லியுள்ளனா். சிலா் அதிமுக - பாஜக அணி வெற்றி பெறும் என சொல்லியுள்ளனா். கருத்துக் கணிப்புகளை நம்பத் தேவையில்லை. எப்படி கணக்கு போட்டாலும் திமுக கூட்டணியே பெரும் வெற்றி பெறும்.

திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை தவெக தலைவா் விஜய் அதிகம் பெறுவாா். ஆனால், தனித்த சக்தியாக திமுக, அதிமுக அணிகளை பின்னுக்குத் தள்ளும் வலிமையை விஜய் பெறவில்லை.

முடிவு எதுவாக இருந்தாலும் நமது அரசியல் களம் நீா்த்துப் போகாது; நமது பயணம் வேகம் பெறும், தீவிரமடையும்”எனத் தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.