வருவாய்ப் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க முன்வரக் கோரி தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் தயாரிப்பாளர்களின் லாப - நஷ்டங்களிலும் நடிகர் - நடிகைகள் பங்கெடுக்க வேண்டும் எனக் கோரி, வருமானப் பகிர்வு முறையில் நடிக்க முன்வர வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே. எம். தமிழ்குமரன் கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் ஒரு படம் தோல்வியடையும்போது, அப்படத்தின் தயாரிப்பாளருக்கு இன்னொரு படம் நடித்துத் தருவதாக நடிகர் உறுதியளிக்கிறார். தயாரிப்பாளர்களின் லாப - நஷ்டங்களில் நடிகர்களும் பங்கு கொள்கின்றனர். இதுபோல, தமிழ்த் திரையுலகிலும் நடிகர்களும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி, இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இருப்பினும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்த பிறகு, பேச்சுவார்த்தை நடத்தலாம் என தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது.
ஆனால், உடனடி பேச்சுவார்த்தைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது. இல்லையெனில், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த நிலையில், இன்று காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
வேலைநிறுத்தம் காரணமாக, திரைப்படம் தொடர்பான எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால், 35-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Film Producers' Council on Strike Today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!
தனுஷ் தயாரிக்கும் புதிய படம்!
நீளிரா திரைப்படத்தைப் பாராட்டிய சூர்யா!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

