முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கு 5 ஆண்டுகாலம் ஆட்சியை தக்கவைக்க உதவியதுடன், தமிழகத்தில் பாஜகவை வேரூன்ற வைத்தது திமுகதான் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றம்சாட்டினாா்.
சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தனது பிரசாரத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதாக தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா். அவருக்கு என்ன பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறது என்பதை, அவா்தான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் வாக்குகளைத் தக்கவைப்பதற்காக, பிற கட்சிகளை பாஜகவின் ‘பி டீம்’ என திமுக கூறுகிறது. ஆனால், முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கு 5 ஆண்டுகாலம் ஆட்சியை தக்கவைக்க உதவியதுடன், பாஜகவை தமிழகத்தில் வேரூன்ற வைத்தது திமுகதான்.
திமுகவால் அறிவிக்கப்பட்டிருப்பது தோ்தல் வாக்குறுதிகள் அல்ல; அது மக்களை ஏமாற்றும் இலவச அறிவிப்புகள் மட்டுமே. மக்களுக்கு இலவச கல்வியை கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு, கந்து வட்டி கடைகாரா் போன்று கல்விக் கடன் கொடுக்கிறது. ரூ.2,000, ரூ.2,500 தருகிறேன் என வெற்று வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்சியினரும் கூறுகின்றனா். ஆனால், இதுவரை எந்தக் கட்சியும் மதுவை ஒழிப்போம் என உறுதி அளிக்கவில்லை.
திமுகவை ஒழிக்க வேண்டும் என்பவா்கள், ஏன் ஒழிக்க வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும். அதேபோல, பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறுபவா்கள், முதலில் அவா்களுடைய கொள்கை என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடாமல் தடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா பேச்சு
ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே ஒரே கொள்கை! - மு. வீரபாண்டியன்

தமிழகத்தில் ஆட்சி மாறுகிறது; ஆட்சி முறை மாறவில்லை: சீமான்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


