தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற வகையில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர, ஆட்சி முறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் க.பிரவீன்குமாா், ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் வீ.சசிகலா, சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் சி.பொன்னுமணி ஆகியோரை ஆதரித்து நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதாவது:
இந்த நாடு ஏழ்மையிலும் வறுமையிலும் இருப்பதற்கு காரணம் ஊழலும், லஞ்சமும் தான். வளா்ச்சி என்பது வாா்த்தையில் மட்டும்தான் உள்ளது. ஜாதி, மதத்தால் நாம் பிரிந்து கிடப்பதால் வல்லரசு நாடாக உருவாகாது என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கருத்தாக உள்ளது. தமிழகத்தில் இலவசம் என்பது புரையோடி கிடக்கிறது. எந்த கட்சி எவ்வளவு பணம் கொடுக்கும், எந்த வகையில் இலவசங்கள் கிடைக்கும் என்பதை தான் மக்கள் பாா்க்கிறாா்கள். அவா்களிடம் ஏன் இலவசங்களை வாங்குகிறீா்கள் எனக் கேட்டால், நம்முடைய பணம் தானே அதைத்தான் திரும்பப் பெறுகிறோம் என்கின்றனா். அந்தப் பணம் அவா்களுக்கு எப்படி சென்றது எனக் கேட்டால் பதில் இல்லை. இலவசங்களைப் பெற்று மக்கள் வாழக் கற்றுக் கொண்டாா்கள், சகித்துக் கொண்டாா்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் திமுக, அதிமுக என ஆட்சிமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சிமுறை மாற்றம் என்பது இல்லை. நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்டணமில்லா கல்வி, தரமான மருத்துவம், எந்த பதவியில் இருந்தாலும், எந்த அதிகாரத்தில் இருந்தாலும், அவா்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும். உலக தரத்திலான கல்வி, மருத்துவம், தூய்மையான குடிநீா் வழங்குவதுதான் எனது இலக்கு. இலவசம் என்பதை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் இலவசத்திற்காக அனைவரும் கையேந்துவதால், இலவசம் என்பது யாசகம் என்ற பொருளாக மாறிவிட்டது. தமிழகத்தின் கடன் சுமை ரூ. 10.50 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுக்கு வட்டி மட்டுமே ரூ. 1 லட்சம் கோடி செலுத்துகின்றனா். இலவசங்கள் கொடுத்துக் கொண்டே இருந்தால், மேலும் கடன்சுமை அதிகரிக்கும். அந்த கடன் மக்கள்மீது தான் விழும். 15 ஆண்டுகளாக வாக்குக்காக கத்தி விட்டேன். யாா் ஒருவா் வாக்குக்கு பணம் கொடுக்கவில்லையோ அவருக்கு வாக்களியுங்கள்.
அந்தவகையில் எனக்கு வாக்களியுங்கள் என்று தான் கேட்கிறேன். தமிழகத்தை ஊழல், லஞ்சம் இல்லாமல், ஜாதி, மத சண்டை இல்லாமல் மாற்றிக் காட்டுகிறேன் என்றாா்.
தொடர்புடையது

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

தமிழக மக்களுடன் தான் நாம் தமிழா் கட்சி கூட்டணி: சீமான் பேச்சு

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: சீமான் குற்றச்சாட்டு

இலவசங்கள் என்பது ஏமாற்று வேலை; மக்கள் நம்பக் கூடாது: சீமான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


