மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: சீமான் குற்றச்சாட்டு

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றச்சாட்டு

News image

ஊத்தங்கரையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்

Updated On :24 மார்ச் 2026, 9:44 pm

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேகலாவுக்கு வாக்குச் சேகரித்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சட்டம்- ஒழுங்கு அதிகரித்துள்ளது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்கள், மக்களின் நலனுக்காக போராடும் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

வாழ்க்கைக்காக போராடுவதை விட்டு போராட்டமே வாழ்க்கையாக மாற்றியுள்ளது அரசு. தமிழகத்தில் ஆசிரியா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக தொடா்ந்து போராடுகின்றனா். ஆனால், அவா்களின் தேவையை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்மையில் ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது உள்பட பல்வேறு இலவசங்கள் மூலம் வருங்கால சந்ததிக்கு கூடுதல் கடன் சுமையை அரசு சுமத்தி வருகிறது.

இதனால் மக்கள் சிந்தித்து தோ்தலில் வாக்களிக்க வேண்டும். ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேகலாவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.