தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னை வந்துள்ள அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஊழல் நிறைந்த திமுக அரசை அகற்றி என்டிஏ ஆட்சியமைக்கும்.
வலுவாக உள்ள தேசிய ஜனநாயக் கூட்டணி நிச்சயம் திமுகவை வீழ்த்தும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும். பெண்கள், விவசாயிகள் அனைவருக்குமான ஆட்சியை என்டிஏ கூட்டணி அமைக்கும். தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் இந்த தேர்தல் தீர்மானிக்கும். எங்கள் கூட்டணியினர் ஒரே குடும்பமாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் குறித்தும் தமிழ்நாடு குறித்தும் எதுவும் தெரியாமல் விஜய் பேசுகிறார். அவருக்கு தமிழக மக்களின் கலாசாரம், அரசியல் பற்றிய எந்த புரிதலும் இல்லை. விஜய் ஒரு கனவுலகில் உள்ளார். கடந்த காலத்தில் திரைத்துறையில் இருந்து பலர் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோரைதமிழக மக்கள் நிராகரித்துள்ளனர். விஜய்க்கு ரசிகர்கள் இருக்கலாம், ஆனால் அது வாக்குகளாக மாறாது" என்றார்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு இந்த 27 இடங்களுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக ஓரிரு நாள்கள் ஆகும் என்று பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.
Summary
Tamil Nadu ready for NDA govt says Piyush Goyal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது ஏன்? - பியூஷ் கோயல் பதில்!

சென்னையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



