தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.
மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவினாசியில் எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் எஸ். விஜயதாரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை. தேசிய தலைமை வலியுறுத்தியும் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெறுவார்கள்.
அர்ப்பணிப்புடன் கூடிய செயல் வீரரான அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர் ஒரு தொண்டராக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவே விரும்புகிறார். கட்சியினரின் உணர்வு, விருப்பத்தின் பேரிலேயே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.


Summary
TN BJP election in charge Piyush Goyal reply on Why Did Annamalai Not Contest?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

விஜய் கனவுலகில் இருக்கிறார்; அவருக்கு எந்த புரிதலும் இல்லை: பியூஷ் கோயல் பேட்டி

பியூஷ் கோயல் சென்னை வருகை! பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



