மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளேன்: ஜி.வி. பிரகாஷ் குமார்

மூன்றாவது முறையாக அஜித்குமாரோடு இணைந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News image

ஜி.வி. பிரகாஷ் குமார்.

Updated On :29 மார்ச் 2026, 11:21 am

மூன்றாவது முறையாக அஜித்குமாரோடு இணைந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் மார்ச் 27ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் ஹேப்பி ராஜ். தந்தை, மகன் இடையேயான பாசத்தை விளக்கும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ், மரியம் ஜார்ஜ், மதுரை முத்து உட்பட திரைப்பட குழுவினர் பலர் இன்று மதுரை செல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய கோபுரம் திரையரங்கிற்கு வருகை தந்து ரசிகர்களுடன் சிறிது நேரம் படம் பார்த்தனர்.

முன்னதாக திரைப்படத்தில் நடித்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் மதுரை முத்து உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், மதுரை மக்களுடைய அன்பு பாசம் வரவேற்பு உள்ளிட்டவைகளைப் பார்த்தது மகிழ்ச்சி.

மதுரை மண்ணின் மைந்தன் மதுரை முத்துவின் நகைச்சுவை உணர்வு எங்களை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது. அதேபோல தற்போது இங்கே அளிக்கப்பட்ட வரவேற்பும் எங்களை வியப்படையச் செய்கிறது.

ஆடுகளம் போன்று மதுரையின் கதைக்களமாக, மதுரைக்கு ஏற்ற வைபோடு வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக இசையமைப்பேன்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது குறித்த கேள்விக்கு, அரசியல் ரீதியாக நான் பொதுவானவன், இருந்தாலும் (நடிகர் விஜய்க்கு) பெஸ்ட் ஆப் லக் என்றார்.

குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்குமாரோடு இணைந்துள்ளேன். சிறப்பானதொரு முறையில் அந்த இசை அமையும் என்று தெரிவித்தார்.

Summary

Music composer G.V. Prakash Kumar has announced that he is teaming up with Ajith Kumar for the third time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.